
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு மெகா ஹிட் ஆன படம் பரியேறும் பெருமாள். இந்த படத்தில் பெண் வேடம் போடும் கூத்து கலைஞர் தங்கராசு ஹீரோவின் அப்பாவாக நடித்திருந்தார். ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்து ஷாக்கிங்கான அப்ளாசை அள்ளினார்.

அந்த பட ஹிட் ஆன நேரத்தில் குடிசை வீட்டில்தான் குடியிருந்தார்.
இவர் 40 ஆண்டுகாலமாக பெண் வேடமிட்டு நடித்த கூத்துக்கலைஞர்.
தமுஎகச சார்பில் கடந்த ஆண்டில். கலைச்சுடர் விருது அவருக்கு வழங்கப்பட்டது
அப்போது அவரது நிலைமையைக் கண்டு, நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கவனத்திற்கு கொண்டு சென்றதன் விளைவாக, வீடு கட்ட அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது.
இதன் காரணமாக அழகான மாடி வீடு கட்டப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் புதிய இல்லத்திற்கு செல்ல இருக்கிறார் தங்கராசு.

591 Views
