புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

ட்ரோன்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை!

 

வெளிநாடுகளில் இருந்து ட்ரோன்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே ட்ரோன்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த தடை பிறக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ராணுவ பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்வதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் ட்ரோன்களுக்கான உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கு எந்த அனுமதியும் பெறத் தேவையில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

432 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன