ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 2
Shadow

சென்னையின் 45-வது புத்தகக் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்!

 

 

 

சென்னையின் 45-வது புத்தகக் கண்காட்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 45 ஆவது புத்தக காட்சியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான ‘பபாசி’ சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது. வரும் மார்ச் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ள புத்தக காட்சியில், 800 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

கொரோனா முன்னெச்சரிக்கையாக 65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அடையாள அட்டையுடன் வரும் மாணவர்களுக்கு, இலவச நுழைவுச் சீட்டு வழங்கப்படும்.

மற்றவர்களுக்கு, 10 ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. கடந்த மாதம் தொடங்கப்பட இருந்த புத்தக காட்சி, கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தொடங்குகிறது

295 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன