திங்கட்கிழமை, மே 13
Shadow

மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு தமிழகத்தை பார்த்தால் பி.பி. ஏறத்தான் செய்யும் – பாஜகவை மறைமுகமாக சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 

மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு தமிழகத்தை பார்த்தால் பி.பி. ஏறத்தான் செய்யும் என்று பாஜகவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக சாடியுள்ளார்.

தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகளில் தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், பருவமழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டதற்காக விவசாயிகளுக்கு 33 கோடியே 86 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அதிமுக ஆட்சியில் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டதாக கூறிய முதல்வர், ஆறுகளில் தூர்வாரும் பணியில் கமிஷனை தூர்வாரியவர் எடப்பாடி பழனிசாமி என்றும் விமர்சித்தார்.

மேலும் வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்கு தொடர்ந்து துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என்றும் கடுமையாக சாடினார்.

இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் தேர்தல் பரப்புரை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், திமுக ஆட்சியில் செயல்படுத்தியுள்ள திட்டங்களை பட்டியலிட்டு, வளச்சிப் பணிகள் தொடர்ந்திட நகர்ப்புற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவளிக்க வாக்காளர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

கொரோனா சூழலிலும் தமிழகத்துக்கு வர வேண்டிய 16ஆயிரத்து 725 கோடி ரூபாய், ஜி எஸ் டி நிலுவை தொகையை தராமல் மத்திய அரசு இழுத்தடிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு தமிழகத்தை பார்த்தால் பி.பி ஏறத்தான் செய்யும் எனவும், பாஜகவை மறைமுகமாக முதலமைச்சர் சாடியுள்ளார்.

 

190 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன