சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

Tag: mk stalin latest news

மயங்கி விழுந்த சீமான்… உடல் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!

மயங்கி விழுந்த சீமான்… உடல் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின்
திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளுக்காக ரயில்வே துறைக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்துவதற்கு ரயில்வே துறையினர் அப்பகுதியில் உள்ள வீடுகளை அகற்றுவதற்காக ஜேசிபி எந்திரங்களை கொண்டு வந்தனர் பொதுமக்கள் வீடுகளை இடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறி ஜேசிபி எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இடிக்கப்படும் வீடுகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டுமென்றும் அல்லது தமிழக அரசால் மாற்று இடம் வழங்குவதற்கு உறுதி அளித்தால் மட்டுமே தற்போது உள்ள வீடுகளை அகற்றுவதற்கு அனுமதி அளிப்போம் என்று கூறி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்பகுதி மக்களை சந்தித்து பேசி வந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து...
நாடாளுமன்றத்தில் மு.க.ஸ்டாலின்… உற்சாகமாக செல்பி எடுத்துக்கொண்ட எம்.பி.க்கள்!

நாடாளுமன்றத்தில் மு.க.ஸ்டாலின்… உற்சாகமாக செல்பி எடுத்துக்கொண்ட எம்.பி.க்கள்!

HOME SLIDER, NEWS, Photos, politics, செய்திகள், முதல்வர் ஸ்டாலின், வீடியோ
நாடாளுமன்றத்தில் மு.க.ஸ்டாலின்... உற்சாகமாக செல்பி எடுத்துக்கொண்ட எம்.பி.க்கள்.. தமிழக முதலமைச்சர் மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தை சுற்றிப் பார்த்தார். அப்போது எம்.பி.க்கள் அவருடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்துகொண்டனர்.   இதை தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்திற்குள் வந்த மு.க.ஸ்டாலின் உடன் தமிழக எம்.பி.க்களான கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி சோனு ஆகியோர் புகைப்படம் எடுத்துகொண்டனர்   திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா மு.க.ஸ்டாலின் உடன் புகைப்படம் எடுத்துகொண்டார்.       Tamil Nadu CM MK Stalin in his meeting with PM Modi today discussed the economic condition in Sri Lanka. He proposed to send relief materials including food and medicines from Tamil N...
கிராக்கி அதிகமுள்ள சீர்திருத்த திருமணத்தை நடத்தும் புரோகிதர் நான் – திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி

கிராக்கி அதிகமுள்ள சீர்திருத்த திருமணத்தை நடத்தும் புரோகிதர் நான் – திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி

HOME SLIDER, kodanki voice, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    வைதீக புரோகிதரைவிட கிராக்கி அதிகமுள்ள சீர்திருத்த திருமணத்தை நடத்தும் புரோகிதர் நான் - திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி   https://youtu.be/I7bgRnbGpb4  
கறுப்பு சிவப்பு கொடியுடன் உதய சூரியன் சின்னம் டாப்பில் ஸ்டாலின்- துர்கா அமர்ந்திருந்த கேக்கை வெட்டிய முதல்வர்!

கறுப்பு சிவப்பு கொடியுடன் உதய சூரியன் சின்னம் டாப்பில் ஸ்டாலின்- துர்கா அமர்ந்திருந்த கேக்கை வெட்டிய முதல்வர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார். உதய சூரியன் சின்னத்தில் கறுப்பு சிவப்பு கொடியுடன் டாப்பில் ஸ்டாலின்- துர்கா அமர்ந்திருப்போது போல கேக் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த கேக்கை வெட்டி பிறந்தநாளை மு.க.ஸ்டாலின் கொண்டாடினார். அப்போது, அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரிசன் உடனிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஸ்டாலின் தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடுவதைத் தவிர்த்து வந்தார். தொண்டர்களை சந்தித்தும் அவர் வாழ்த்து பெறாமல் இருந்தார். இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்ற போது பதவியேற்பு விழாவை எளிமையான முறையில் ஸ்டாலின் நடத்தினர். இந்நிலையில், ஆண்டு முதலமைச்சராக அரியனையில் அமர்ந்து தனது 69வது பிறந்தநாளை கொண்டாட...
நான் எழுதிய “உங்களின் ஒருவன்” புத்தகத்தை இம்மாத இறுதியில் வெளியிடுகிறேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

நான் எழுதிய “உங்களின் ஒருவன்” புத்தகத்தை இம்மாத இறுதியில் வெளியிடுகிறேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னை 45- வதுபுத்தக்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதன்பிறகு கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதுகள், பாபாசி விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். உரைநடைக்கான கலைஞர் பொற்கிழி விருது பத்திரிக்கையாளர் சமஸ், நாடகத்திற்கான பொற்கிழி விருது பிரசன்னா ராமாசி, கவிதைக்கான பொற்கிழி விருது ஆசைத்தம்பி, புதினத்திற்கு அ.வெண்ணிலா, பிறமொழிக்கான பொற்கிழி விருது பால் சக்கரியா, ஆங்கலத்திற்கான பொற்கிழி விருது மீனா கந்தசாமிக்கும் வழங்கப்பட்டது. பபாசி விருதுகளான பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது ச.மெ.சோமசுந்தரம், சிறந்த பதிப்பாளருக்கான விருது ரவி தமிழ்வாணன், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்பகச் செம்மல் ச.மெய்யப்பன் விருது பொன்னழகு, குழந்தை கவிஞர் அழ வள்ளியப்பா விருது திருவை பாபு, பாரி செல்லப்பனார் விருது முனைவர் தேவிரா, அம்சவேணி பெரியண்ணன் விருது பாரதி பாஸ்கர், நெல்லை...
மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு தமிழகத்தை பார்த்தால் பி.பி. ஏறத்தான் செய்யும் – பாஜகவை மறைமுகமாக சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு தமிழகத்தை பார்த்தால் பி.பி. ஏறத்தான் செய்யும் – பாஜகவை மறைமுகமாக சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு தமிழகத்தை பார்த்தால் பி.பி. ஏறத்தான் செய்யும் என்று பாஜகவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக சாடியுள்ளார். தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகளில் தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பருவமழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டதற்காக விவசாயிகளுக்கு 33 கோடியே 86 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அதிமுக ஆட்சியில் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டதாக கூறிய முதல்வர், ஆறுகளில் தூர்வாரும் பணியில் கமிஷனை தூர்வாரியவர் எடப்பாடி பழனிசாமி என்றும் விமர்சித்தார். மேலும் வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்கு தொடர்ந்து துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி ...
நீட் விலக்கு மசோதா… வருகிற 8-ந்தேி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்!

நீட் விலக்கு மசோதா… வருகிற 8-ந்தேி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பியனுப்பிய நிலையில், இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது மீண்டும் சட்டசபையை கூட்டி மசோதாவை அப்படியே நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்புவது பற்றி விவாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டுவது தொடர்பாகவும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அதனடிப்படையில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு கூட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் வருகிற 8-ந்தேி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்....
நாட்டில் உள்ள முக்கியமான 37 கட்சித்தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்!

நாட்டில் உள்ள முக்கியமான 37 கட்சித்தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு நாட்டின் 37 கட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் அழைப்பு. நாடு முழுவதும் உள்ள சமூகநீதி கொள்கையை முன்னெடுத்துச் செல்ல அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு என்ற அமைப்பை தொடங்கவுள்ளதாக ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் கடிதம். நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினர், பட்டியிலின மக்களின் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களை பாதுகாக்கவே இந்த கூட்டமைப்பு - ஸ்டாலின். பாஜக அல்லாத தேசிய கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு. சமத்துவம், சுய மரியாதை, சமூகநீதியில் நம்பிக்கை கொண்டவர்கள் ஒன்றிணைந்தால்ஒன்றிணைந்தால்தான் பிரிவினை, மதவாதத்தை எதிர்த்து போராட முடியும் - ஸ்டாலின். பன்முகத்தன்மை கொண்ட நமது ஒன்றியம் பிரிவினை, மத மேலாதிக்கத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது - ஸ்டாலின். சமூகநீதியில் பல பத்தாண்டுகளாக நாம் ...
காந்தி சிலைக்கு மரியாதை செலுத்த கவர்னர் ரவி வரும் போது ஒலித்த “திராவிட நாடு வாழ்க” பாடல்!

காந்தி சிலைக்கு மரியாதை செலுத்த கவர்னர் ரவி வரும் போது ஒலித்த “திராவிட நாடு வாழ்க” பாடல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்த கவர்னர் ஆர்.என்.ரவி சென்றபொழுது, அங்கு ‘வாழ்க திராவிடம், திராவிட நாடு வாழ்க’ என்ற பாடல் பாடப்பட்டது. மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள காந்தி திருவுருவ சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் திருவுருவப் படத்திற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மரியாதை செலுத்தியிருந்தார். இதற்காக நிகழ்விடத்திற்கு அவர் காரிலிருந்து இறங்கி சென்ற பொழுது, “வாழ்க வாழ்க திராவிடர்; வாழ்க திராவிட நாடு; வாழ்க!” என்ற பாடல் பாடப்பட்டது. இந்தப் பாடலை சர்வதேச இசை சங்கம் குழுவினர் மற்றும் பள்ளி மாணவிகள் பாடலைப் பாடினர் முதலமைச்சர் ஸ்டாலின் வரும்பொழுது `மகாத்மா காந்தி வாழ்க; பாரத நாடு வாழ்க’ என்ற பாடல் ஒலிபரப்பானது. ஆளுநர் வருகை தரும் போது திராவிட நாடு பாடல் வெளியானது குறிப்பிடத்தக்கது.   &nb...
”அய்யாதுரை”யாக அழைக்கப்பட வேண்டிய நான் ஸ்டாலின் ஆனது எப்படி? முதல்வர் சொன்ன ருசிகர தகவல்!

”அய்யாதுரை”யாக அழைக்கப்பட வேண்டிய நான் ஸ்டாலின் ஆனது எப்படி? முதல்வர் சொன்ன ருசிகர தகவல்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  தமிழ் திரைப்பட நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரும், திமுக தலைமை நிலைய செயலாளரும், தமிழ் நாடு வீட்டுவசதி துறை வாரியத்தலைவருமான பூச்சி முருகன் இல்ல திருமணம் இன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் அது ஒரு காரணப்பெயர். கம்யூனிச கொள்கை மீது கலைஞர் அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதனால் தான் அவர் இறந்த நேரத்தில், நான் பிறந்த காரணத்தால் அவருடைய நினைவாக அந்த பெயரை எனக்கு சூட்டினார்கள். அந்த பெயரை சூட்டுவதற்கு முன்பு கலைஞர் அவர்கள் எனக்கு என்ன பெயர் வைக்கவேண்டும் என்று நினைத்திருந்தால் என்று சொன்னால், எனக்கு 'அய்யாதுரை' என பெயர் வைப்பதாக இருந்த‌து.  அய்யா என்றால் தந்தை பெரியார். துரை என்றால் அண்ணாவின் பெயருக்கு பின்னால் வரக்கூடிய துரை என்று வைக்க வேண்டும் என்று கருதி இரு...