
சென்னை 45- வதுபுத்தக்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதன்பிறகு கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதுகள், பாபாசி விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
உரைநடைக்கான கலைஞர் பொற்கிழி விருது பத்திரிக்கையாளர் சமஸ், நாடகத்திற்கான பொற்கிழி விருது பிரசன்னா ராமாசி, கவிதைக்கான பொற்கிழி விருது ஆசைத்தம்பி,
புதினத்திற்கு அ.வெண்ணிலா, பிறமொழிக்கான பொற்கிழி விருது பால் சக்கரியா, ஆங்கலத்திற்கான பொற்கிழி விருது மீனா கந்தசாமிக்கும் வழங்கப்பட்டது.
பபாசி விருதுகளான பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது ச.மெ.சோமசுந்தரம், சிறந்த பதிப்பாளருக்கான விருது ரவி தமிழ்வாணன், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்பகச் செம்மல் ச.மெய்யப்பன் விருது பொன்னழகு,
குழந்தை கவிஞர் அழ வள்ளியப்பா விருது திருவை பாபு, பாரி செல்லப்பனார் விருது முனைவர் தேவிரா, அம்சவேணி பெரியண்ணன் விருது பாரதி பாஸ்கர், நெல்லை க.முத்து விருது மு.வெ.பாலசுப்புரமணியன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

அதன்பின்னர் மேடையில் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், ‘சென்னை, மதுரை, கோவை போல தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் பபாசி புத்தக்காட்சியை நடத்த வேண்டும்.
அதற்கான உதவிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும். திராவிட இயக்கம் என்பது அறிவு இயக்கம்.
திராவிடக் கழகத்தின் தலைமை அலுவலகத்தின் பெயரே அண்ணா அறிவாலயம். ஆண்டாண்டுகளாக அடிமைபடுத்தப்பட்டிருந்த தமிழ் சமூகத்திற்கு புத்தகங்கள் மூலம் அறிவை வளர்த்தது திராவிட இயக்கம்.
மாநிலத்தின் அனைத்து போட்டி தேர்வுகளிலும் கட்டாயம் தமிழ் தகுதி தேர்வு நடத்தப்படும். அரசு ஊழியர்கள் தமிழ் மொழியில் கையெழுத்திடுவது கோப்புகளை தமிழில் எழுதுவதை அரசு ஊக்குவித்துக்கொண்டிருக்கிறது.
பொது நிகழ்ச்சிகளில் எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 1.5 லட்சம் புத்தகங்கள் இலங்கை யாழ்பாணம் நூலகம் மற்றும் தமிழகத்தில் உள்ள சிறு நூலகங்களுக்கு அனுப்பபட்டுள்ளது.
உங்களின் ஒருவன் எனும் புத்தகத்தை நான் எழுதியிருக்கிறேன். அதை இம்மாத இறுதியில் வெளியிடுகிறேன். என்னுடைய வாழ்கையில் நான் சந்தித்த மிக முக்கிய நிகழ்வுகள் தொடங்கி மிசா போரட்டம் வரை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது
விரைவில் 45வது சென்னை புத்தகக்க காட்சியில் புத்தகம் விற்பனைக்கு வைக்கப்படும். புத்தகக் காட்சியில் நல்ல திட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட வேண்டும் என விரும்பினேன். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக அறிவிக்க முடியவில்லை. இரண்டு நாட்களில் மக்களுக்கான நல்ல செய்தியை வெளியிடுவேன்’ என்று தெரிவித்தார்.

