
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார்.
உதய சூரியன் சின்னத்தில் கறுப்பு சிவப்பு கொடியுடன் டாப்பில் ஸ்டாலின்- துர்கா அமர்ந்திருப்போது போல கேக் வடிவமைக்கப்பட்டிருந்தது.
அந்த கேக்கை வெட்டி பிறந்தநாளை மு.க.ஸ்டாலின் கொண்டாடினார். அப்போது, அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரிசன் உடனிருந்தனர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஸ்டாலின் தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடுவதைத் தவிர்த்து வந்தார். தொண்டர்களை சந்தித்தும் அவர் வாழ்த்து பெறாமல் இருந்தார்.
இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்ற போது பதவியேற்பு விழாவை எளிமையான முறையில் ஸ்டாலின் நடத்தினர்.
இந்நிலையில், ஆண்டு முதலமைச்சராக அரியனையில் அமர்ந்து தனது 69வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். முதல்வரான பின்னர் வரும் முதல் பிறந்தநாள் என்பதால், திமுகவினம் விமர்சியாக கொண்டாட திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், தனது பிறந்தநாளையொட்டி நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், என் பிறந்தநாளையொட்டி, தொண்டர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டிவிடக் கூடாது என்றும், மக்களுக்கு பயனுள்ள வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.

