
நடிகர் அஜித் குமார் நடித்த வலிமை திரைப்படம் பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வெற்றிநடை போடுகிறது.
அஜித் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ள இந்த படம் வசூலிலும் பல சாதனைகளை படைத்து வருகிறது.
இதனிடையே வலிமை திரைப்படத்தின் தாய் பாசம் பற்றிய பாடல் ஜெயலலிதா நினைவு நாளிலும் திரைப்படம் ஜெயலலிதா பிறந்த நாள் அன்று வெளியானது.
இதனால் அஜித் அரசியலுக்கு வருவார் என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர். முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ நடிகர் அஜித்குமார் மனதளவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக் கொண்டவர் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் ஜெயலலிதாவின் மேலளார் பூங்குன்றன் சங்கரலிங்கம் அஜித் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இதனால் அஜித் குறித்த அரசியல் செய்திகள் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் அஜித் அரசியலுக்கு வருவார் என்ற வதந்திகளுக்கு அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அஜித் குமாருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை, எனவே இதுபோன்ற தவறான தகவல்களை ஊக்குவிப்பதைத் தவிர்க்குமாறு மதிப்பிற்குரிய ஊடகவியலாளர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றுள்ளார்
"Mr Ajith kumar has got no intentions of venturing into politics and hence humbly requests the respected members of the media to refrain from encouraging such misleading informations".https://t.co/vILUFO8HCI
— Suresh Chandra (@SureshChandraa) March 1, 2022
