2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம், தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பில் மாற்றமில்லை.
தங்கம், வெள்ளி, பிளாட்டினத்திற்கு இறக்குமதி வரி குறைப்பு, வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, 80 கோடி மக்கள் பயன் பெறும் கரீப் அன்னயோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு என பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே பீகார், ஆந்திராவை ஆளும் பாஜகவின் கூட்டணி கட்சிகள் தங்கள் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்தன.
அந்த கோரிக்கைக்கு ஏற்ப ஆந்திரா, பீகாருக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு அ...
*பல பெண்களுடன் உல்லாசம்; 4 மாதங்களுக்கு ஒருமுறை எச்ஐவி பரிசோதனை செய்த பிரஜ்வல்: எஸ்ஐடி விசாரணையில் பரபரப்பு தகவல்*
பெங்களூரு: பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை எச்ஐவி பரிசோதனை செய்து வந்தது எஸ்ஐடி நடத்திய விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.மாநிலத்தின் ஹாசன் தொகுதி முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் புகார் வெளியாகியது. நூற்றுக்கணக்கான பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக பென்டிரைவ் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையில் பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட 5 பெண்கள் கொடுத்த புகார் அடிப்படையில் சிஐடி போலீசாரால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை படையினர் விசாரணை நடத்திய பின் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார்.இந்நிலையில் இப்புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணை படை அதிகாரிகள், பிரஜ்வல் ரேவண்ணாவ...
சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு, பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி இன்று நடைபெற்றது.
இந்த தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து பா.ஜ.க.வை எதிர்த்து போட்டியிட்டன. அதன்படி, ஆம் ஆத்மியை சேர்ந்த குல்தீப் குமாரும், பா.ஜ.க.வை சேர்ந்த மனோஜ் சோங்கரும் மேயர் பதவிக்கு போட்டியிட்டனர். மேலும், மூத்த துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் குர்பிரீத் சிங்கும், பா.ஜ.க.வைச் சேர்ந்த குல்ஜீத் சந்தும் போட்டியிட்டனர். துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் நிர்மலா தேவியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் ராஜிந்தர் சர்மா போட்டியிட்டார்.ஏற்கனவே உறுப்பினர்கள் அடிப்படையில் ஆம் ஆத்மி-காங் கூட்டணிக்கு 20 வாக்குகளும், பாஜகவுக்கு 16 வாக்குகளும் மட்டுமே இருந்தது. .
இந்த சூழலில் எப்படியும்...