வைதீக புரோகிதரைவிட கிராக்கி அதிகமுள்ள சீர்திருத்த திருமணத்தை நடத்தும் புரோகிதர் நான் - திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி
https://youtu.be/I7bgRnbGpb4
மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு தமிழகத்தை பார்த்தால் பி.பி. ஏறத்தான் செய்யும் என்று பாஜகவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக சாடியுள்ளார்.
தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகளில் தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், பருவமழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டதற்காக விவசாயிகளுக்கு 33 கோடியே 86 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அதிமுக ஆட்சியில் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டதாக கூறிய முதல்வர், ஆறுகளில் தூர்வாரும் பணியில் கமிஷனை தூர்வாரியவர் எடப்பாடி பழனிசாமி என்றும் விமர்சித்தார்.
மேலும் வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்கு தொடர்ந்து துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி ...