புதன்கிழமை, ஜூலை 29
Shadow

எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் வெளியானது!

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.
மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டீசர் இன்று(18.02.2022) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் சரியாக 6 மணிக்கு வெளியானது. இந்த டீசரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
601 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன