வியாழக்கிழமை, மே 16
Shadow

சென்னையில் படுமோசமான வாக்குப்பதிவு!

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதில் பிற மாவட்டங்களை விட சென்னையில் குறைந்த அளவிலே வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன.

இவற்றில் மொத்தமாக 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது.

காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை பொதுமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

மாலை5 மணிமுதல் 6 மணிவரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

31,150 வாக்குப்பதிவு மையங்களில் நடைபெற்ற தேர்தலுக்காக 1.60 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பிற மாவட்டங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றபோதும் சென்னையில் குறைந்த அளவிலேயே வாக்குகள் பதிவாகின. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் 43.59 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் விடுமுறையையொட்டி பலரும் சொந்த ஊர்களுக்கு சென்றதால் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

128 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன