
வலிமையுடன் களம் இறங்கிய ”பவுடர்” போலீசின் பட்டாக்கத்தி டீசர் ரவுசு!
தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளுக்கும், புது முகங்களுக்கும் எப்போதும் தனி வரவேற்பு இருக்கும்.
தாதா87 படம் மூலமாக தாத்தாவாக இருக்கும் சாருஹாசனை தாதாவாக காட்டி தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்துக் கொண்டவர் இயக்குனர் விஜய்ஸ்ரீஜி.
ஏற்கனவே தென்னிந்திய சினிமா உலகில் பத்திரிகை தொடர்பாளராக பணியாற்றிய படியே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் நிகில்முருகன்.
இந்த இருவரும் “பவுடர்” படத்தின் மூலமாக இணைந்திருக்கிறார்கள். விஜய்ஸ்ரீஜி இயக்கத்தில் ராகவன் என்ற போலீஸ் அதிகாரியாக நிகில்முருகன் நடித்து வருகிறார்.

இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அஜீத்தின் அலிமை படம் நேற்று வெளியான சூழலில், நிகிலின் பவுடர் படக் காட்சி ஒன்று டீசராக வெளியானது.
அந்த காட்சியில் ரவுடிகள் பட்டாக்கத்தி மூலம் கேக் வெட்டுவது போலவும், அந்த வழியாக வரும் போலீஸ் அதிகாரி ராகவன் அந்த ரவுடிகளை அதே பட்டாக்கத்தியால் பந்தாடுவது போலவும் காட்சிகள் உள்ளது.
அஜீத்தின் வலிமை படம் துவங்கும் முன்பு தியேட்டர்களில் பவுடர் போலீஸ் ராகவனின் பட்டாக்கத்தி ரவுசு காட்சிகள் வந்து ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே இதே இயக்குனர் விஜய்ஸ்ரீஜி தனது முதல்படமான தாதா87 படத்தி டீசர் டிரைலரை ரஜினி படம் வெளியான அன்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே பாணியில் அஜித்தின் வலிமை ரிலீஸ் ஆன நேற்று வலிமையுடன் பவுடர் காட்சிகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர் விஜய்ஸ்ரீஜி.

#வலிமையுடன் மோதிய #பவுடர்…
போலீஸ் ராகவனின் தெறிக்க விடும் பட்டாக்கத்தி ரவுசு #POWDERGlimpses @onlynikil ⚔️ ???? ???? ❤️வாழ்த்துகள்▶️ https://t.co/aSQ3QXdJHL@vijaysrig @vidya_pradeep01 #Mottarajandaran @catchAnithra @agscinemas @divomusicindia #Valimai #Powder @ottrandorai
— kodanki (@onlykodanki) February 25, 2022
