வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி… வைரலாகும் காஜல் அகர்வாலின் வீடியோ!

நடிகை காஜல் அகர்வால் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும்போதே திருமண வாழ்க்கையில், புகுந்து விட்டார்.
கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும்போதே தனது நீண்டநாள் காதலர் கௌதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டு விட்டார்.
இந்தியன் 2 படம் படப்பிடிப்பு தாமதமாகிக்கொண்டே போக, அந்தப் படத்திலிருந்தே விலகிவிட்டார் காஜல் அகர்வால்.
ஏன் விலகினார் என்று பலரும் கேட்ட நிலையில் அதன் பிறகுதான் அவர் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்தது. இந்தியன் 2 படத்தில் காஜலுக்குப் பதில் தமன்னா ஒப்பந்தம் ஆனார்.
சமீபத்தில் காஜல் அகர்வாலுக்கு வளைகாப்பு வைபவம் நடந்தேறியது. மொத்தக் குடும்பமும் ஒன்று சேர்ந்து காஜலை கொண்டாடியிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவியது.
இந்நிலையில், கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செல்லும் வீடியோவை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
429 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன