
யாருக்கு மேயர், துணைமேயர், நகராட்சித்தலைவர் பதவிகளை வழங்குவது என்பதை முடிவு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு பதவி வழங்குவது குறித்த பேச்சுவார்த்தை இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தில் நடைபெற்றது.
காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யுனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட
அனைத்து கூட்டணி கட்சிகளும் இந்த பேச்சுவார்த்தையில் தங்களுக்கு வேண்டிய இடங்கள் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை நிறைவுற்றதை அடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் எங்களுக்கு சில பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கான ஒப்பந்தத்தை கையெழுத்து இட்டுள்ளோம். தி.மு.கவின் கோட்பாடுகளுக்கு இணங்க நாங்கள் கேட்ட இடங்கள் கிடைக்க பெற்றுள்ளன. எனவே முதல்வர் தலைமையில் அறிவிப்புகள் வெளியாகும்’ என்று தெரிவித்தார்.
