திங்கட்கிழமை, மே 13
Shadow

 

வன்னியர்கள் நிதியில் உருவான அறக்கட்டளைக்கும் வன்னியர்களுக்கும் சம்மந்தமில்லையாம்! இராமதாஸ் சார்பில் அரசுக்கு ரகசிய கடிதம் அனுப்பிய பாமக தலைவர் ஜி.கே.மணி.  அம்பலப்படுத்திய சி.என்.இராமமூர்த்தி

திண்டிவனத்தில் பல ஆண்டுகளுக்கு முன் வன்னியர்களுக்காக கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டது.
இந்த அறக்கட்டளைக்கு நிதி உதவி கேட்டு டாக்டர் இராமதாஸ் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
அந்த அறிக்கையை பார்த்து உலகம் முழுதும் உள்ள பல நூற்றுக்கணக்கான வன்னியர்கள் ஏராளமான நிதி உதவி அளித்தார்கள்.
பணம், பொருள் அனுப்ப முடியாதவர்கள் தங்கள் உடல் உழைப்பை வழங்கினார்கள்.
உலகம் முழுவதும் உள்ள அனைத்து வன்னியர்களுக்கும் இந்த அறக்கட்டளை சொந்தமானதாக இருக்கும் என்றெல்லாம் டாக்டர் இராமதாஸ் கூறியிருந்தார்.

அதே நேரம் வச படைத்த வன்னிய முன்னோர்கள் பலரும் இந்த இனத்தின் மேம்பாட்டிற்காக பல லட்சம் மதிப்பிலான நிலங்களை, கல்வி நிலையங்களை, வியாபார தளங்களை எழுதி வைத்து சென்றிருக்கிறார்கள். இந்த சொத்து மதிப்பு மட்டும் பல லட்சம் கோடிகளை தாண்டும்.

அதில் ஒன்றுதான் டாகடர் இராமதாஸ் வசம் உள்ள இராமதாஸ் கல்வி அறக்கட்டளை. இந்த அறக்கட்டளை முன்பு வன்னியர் கல்வி அறக்கட்டளையாக இருந்தது.

இந்த சூழலில் வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.இராமமூர்த்தி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வன்னியர்கள் வாழ்க்கைத்தரம் உயர முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்துக்களை ஒன்றாக இணைத்து பொது சொத்து வாரியம் அமைக்க வேண்டும் என கேட்டிருந்தார் சி.என்.இராமமூர்த்தி.

இந்த வழக்கின் அடிப்படையில் ஜனாதிபதி கையெழுத்துடன் “வன்னியர் பொது சொத்து வாரியம்” அமைக்கப்பட்டது.

இந்த வாரியத்தின் கீழ் அனைத்து வன்னியர் அறக்கட்டளைகளும் வரும் என்பதால் பாமக டாகடர் இராமதாஸ் அவரச அவரசமாக வன்னியர் கல்வி அறக்கட்டளை என்ற பெயரை இராமதாஸ் கல்வி அறக்கட்டளையக மாற்றினார்.

ஆனால், வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.இராமமூர்த்தி தொடுத்த வழக்கில் இரமதாஸ் வசம் உள்ள கல்வி அறக்கட்டளை 58வது அறக்கட்டளையாக அரசு பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

வன்னியர் கல்வி அறக்கட்டளையை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என கடிதம் டாக்டர் இராமதாசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த கடிதத்திற்கு பாமக தலைவரும், பெயர் மாற்றம் செய்யப்பட்ட இராமதாஸ் கல்வி அறக்கட்டளை சார்பில் ஜி.கே.மணி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில் இராமதாஸ் கல்வி அறக்கட்டளைக்கும் வன்னியர்களுக்கும் எந்த தொடர்பும், சம்மந்தமும் இல்லை என்றும், இது சாதி,மதம்,இனம் கடந்த அறக்கட்டளை என குறிப்பிட்டிருக்கிறார் இராமதாஸ்.

இந்த கடிதத்தை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக சி.என்.இராமமூர்த்தி வாங்கியிருக்கிறார்.

வன்னியர்கள் பெயரில் அறக்கட்டளை தொடங்கி, அவர்களிடம் கோடிக்கணகில் வசூல் நடத்திவிட்டு, இப்போது வன்னியர்களுக்கும் அறக்கட்டளைக்கும் தொடர்பு இல்லை என சொல்வது பச்சை துரோகம் என கொந்தளிக்கிறார் சி.என்.இராமமூர்த்தி.

அதோடு, கண்டிப்பாக இராமதாஸ் வசம் உள்ள வன்னியர்களின் பல கோடி சொத்தை மீட்டு வன்னியர் பொது சொத்து வாரியத்தில் சேர்ப்பேன். அதன் மூலம் ஆயிஅக்கணக்கான வன்னியர்களுக்கு கல்வி,வேலைவாய்ப்பு உதவிகள் கிடைக்கும் என்கிறார் சி.என்.ஆர்.

இராமதாசின் இந்த நாடகம் ஆதாரத்துடன் வெளியில் வந்துள்ளதால் வன்னியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

101 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன