சனிக்கிழமை, நவம்பர் 1
Shadow

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு 375 காசுகளாக நிர்ணயம்!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 370 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர்.
எனவே முட்டை கொள்முதல் விலை 375 காசுகளாக அதிகரித்து உள்ளது.
கறிக்கோழி கிலோ ரூ.132-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர்.
எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.134 ஆக அதிகரித்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.66-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.4 உயர்த்த முடிவு செய்தனர்.
எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.70 ஆக அதிகரித்து இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
293 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன