புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

கோடை வெப்பம் அதிகரிப்பு, பகலில் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் – கால்நடைத்துறையினர் அறிவுறுத்தல்!

உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் விவசாயிகள் பலர், பால் உற்பத்திக்காக கால்நடை வளர்த்தல் தொழிலில் தீவிரம் காட்டி வருகின்றனர். இருப்பினும் தீவனப்பற்றாக்குறை, நோய்வாய்ப்படுதல் போன்ற பல்வேறு காரணங்களால் அவ்வப்போது பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர்.
அதேநேரம் இனிவரும் நாட்களில் கோடையில் அதிவெப்பம் காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளவும் உள்ளனர். அதன்படி, கறவை மாடுகளில் பால் உற்பத்தி பாதிக்காமல் இருக்க சில வழிமுறைகளைக் கையாள விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கால்நடைத்துறையினர் கூறியதாவது:
கோடையில் ஈக்களின் பெருக்கம் அதிகரிக்கும். இவை, கறவை மாடுகளை அடிக்கடி வட்டமிடுவதாலும், மேலே அமர்ந்து தொந்தரவு செய்வதாலும் கறவை மாடுகள் அமைதியற்ற நிலையில் இருக்கும்.
இதனால் பால் உற்பத்தி குறையும். ஈக்களை கட்டுப்படுத்தி தகுந்த மருந்தை தெளிக்க வேண்டும். மாட்டுத்தொழுவம் மற்று அதனைச் சுற்றியுள்ள இடங்களையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். சாணம், சிறுநீர் போன்ற கழிவுப்பொருட்களை உடனுக்குடன் அகற்றுவது அவசியமாகும்.
பசுந்தீவனம் அளிப்பதும், பால் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கிறது. அதற்கு, தேவையான அளவு அடர் தீவனங்களையும் சேர்த்தல் வேண்டும். பகலில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கால்நடைத்துறையினர் தெரிவித்தனர்.
166 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன