
இந்தியா சுதந்திரம் அடைந்தது 2014ம் ஆண்டு என்று வரலாற்றை மாற்றி எழுதினாலும் எழுதுவார்கள் என்கிறார் ப.சிதம்பரம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி அனந்தன் 90வது பிறந்தநாள் விழா,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பேசியதாவது, இந்திய அரசியலில் குமரி அனந்தன் தெரிந்து கொள்ளாத விஷயம் இருக்கமுடியாது. குமரி அனந்தன் 1933 ஆம் ஆண்டில் பிறந்தார். அன்று நடந்த வரலாறு பாடப்புத்தகத்தில் மறைக்கப்பட்டு வருகிறது.
அன்றைய காலகட்டத்தில் நடந்த வரலாற்றை மறைந்து வருகிறார்கள். இன்னும் வருகிற நாள்களில் 2014 ஆம் ஆண்டில் தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று எழுதினாலும் எழுவார்கள் என்று பாஜகவை விமர்சித்தார்.
மேலும், பாடப்புத்தகத்தின் வாயிலாக தான் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியும். அதுமாறி வேறுவகையாக நூல்கள் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது என்றும் தெரிவித்தார்.
ஜவஹர்லால் நேரு தனது 40 வயதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்றார்.
இளைஞர்கள் பொறுப்பிற்கு, பதவிக்கு வரமுடியாது என்ற எண்ணத்தை நாம் மனதளவிலாவது ஒழிக்க வேண்டும்.
குமரி அனந்தன் தன் (சுயசரிதை) வரலாற்றை எழுதவேண்டும். அவர் எழுதினால் அதில், தமிழகத்தின் வரலாறு,
காங்கிரஸ் கட்சியின் வரலாறு இடம் பெறும். அதனை ஒரிரு வருடங்களில் அவர் எழுதி எங்களுக்கு தரவேண்டும் என்று என்னுடைய விருப்பத்தை தெரிவித்து கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.
