புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

தமிழகத்தை பதறவைத்த முதல் துப்பாக்கிச்சூடு I kizhathuval encounter I Directed by kodanki Abraham

தமிழகத்தை பதறவைத்த முதல் துப்பாக்கிச்சூடு I kizhathuval encounter I Directed by kodanki Abraham

 

 

சுதந்திரம் பெற்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு 14.9.1957 அன்று கீழத்தூவலில் 5 பேரை போலீசார் படுகொலை செய்த சம்பவம் நீங்காத வடுவாக வரலாற்றில் இடம்பிடித்துவிட்டது.

உயிரிழந்தவர்களுக்கு ராமநாதபுரம் கீழத்தூவலில் நினைவுத் தூண் வைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கீழத்தூவலில் 1957ஆம் ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த சிவமணி, சித்திரவேல், ஜெகநாதன், முத்துமணி, தவசியாண்டி ஆகிய 5 பேரை விசாரணை எனக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அவர்களின் கைகளை, கண்களைக் கட்டி சுட்டுக் கொன்றனர்.

நாட்டையே அதிர்ச்சி அடையச் செய்த இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு கீழத்தூவல் கிராமத்தில் நினைவுத்தூண் எழுப்பப்பட்டது.

இந்த படுகொலை காமராஜர் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்டது. அப்படி பலியானவர்களின் வாரீசுகளிடம் நேரடி அதிர்ச்சி அனுபவங்களை பசும்பொன் தேவர் வரலாறு என்ற பெயரில் ஆவண படமாக இயக்கியிருந்தேன்,

என் நண்பர் கார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான இந்த ஆவண படத்தின் ஒரு பகுதிதான் கீழத்தூவல் சம்பவம்.

 

மீண்டும் உண்மைகளுடன்,

ஆபிரகாம் லிங்கன் @ கோடங்கி

பத்திரிகையாளர், ஆவண பட இயக்குனர்

536 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன