திங்கட்கிழமை, செப்டம்பர் 21
Shadow

கேரளா சர்வதேச திரைப்பட தொடக்க விழாவில் சர்ப்ரைசாக ஆஜரான நடிகை பாவனா!

 

 

கேரளா சர்வதேசத் திரைப்பட விழாவை முதலமைச்சர் பினராய் விஜயன் தொடங்கி வைத்தார்.

திருவனந்தபுரத்தில் 7 நாள்கள் நடைபெறும் திரைப்பட விழாவில் 15 திரையரங்குகளில் 180க்கும் மேற்பட்ட உலகத் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

இதன் தொடக்க விழாவில் நடிகை பாவனா பங்கேற்றது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாவனா வருவதாக நிகழ்வுப் பட்டியலில் வெளியிடப்படாத நிலையில், அவர் திடீரென விழா மேடைக்கு வருகை தந்தார்.

பாவனாவை “symbol of fight” என தயாரிப்பாளர் ரஞ்சித் அறிமுகப்படுத்தினார். அப்போது அங்கிருந்தவர்கள் அரங்கம் நிறைந்த கைத்தட்டலுடன் பாவனாவை வரவேற்றனர்.

மோகன்லால், மம்மூட்டி போன்ற மூத்த நடிகர்கள் கீழே அமர்ந்து இருந்த நிலையில் பாவனா மேடையில் அமர்ந்து இருந்தார்.

கேரள கலாசாரத் துறை அமைச்சர் ஷாஜி செரியன் (Saji Cherian) “கேரளாவின் ரோல் மாடல் என பாவனாவுக்கு புகழாரம் சூட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய பாவனா, கேரளாவின் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன