சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக சபாநாயகருக்கு துபாஷ்-காக பெண்மணி நியமனம்!

 

சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக சபாநாயகருக்கு துபாஷ்-காக பெண்மணி நியமனம்

சட்டமன்றத்தில் துபாஷ் என்ற பெயருடன் அழைக்கப்படும் இந்த பொறுப்பு சட்டமன்ற வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் இருந்து சட்டமன்றம் வரை சபாநாயகர் செல்லும் போது முன்னே செல்வார்.

சபாநாயகர் பேரவையில் இருக்கும்போது பேரவைக்கு வெளியில் காத்திருப்பார். மீண்டும் சபாநாயகர் அவர் அறைக்குச் செல்லும்போது உடன் செல்வார். அவ்வளவுதான்

1990 ஆம் ஆண்டு சட்டமன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்த ராஜலட்சுமி என்பவருக்கு தற்போது 60 வயது எட்டியுள்ளது. வரும் மே மாதம் ராஜலட்சுமி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் இந்த பொறுப்பிற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளது அனைவர் மத்தியிலும் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் இந்த பொறுப்பில் ஆண்களே இருந்து வந்த நிலையில் முதல்முறையாக பெண் ஒருவர் இந்த பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டிருக்கார்

372 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன