வியாழக்கிழமை, அக்டோபர் 15
Shadow

முன்னாள் நீதிபதி கர்ணன் விடுதலை ஆகிறார்

கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த மே மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க போலீசுக்கும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக நீதிபதி கர்ணன் தலைமறைவாக இருந்தார். இந்த காலத்தில் அவரது பதவிக்காலமும் முடிவடைந்தது.


40 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த அவர் கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி கோவையில் கைது செய்யப்பட்டார். அவரை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரியும், அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத ஜெயில் தண்டனையை ரத்து செய்யக்கோரியும் அவரது வக்கீல் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து கொல்கத்தா நகரில் உள்ள பிரசிடென்சி சிறைச்சாலையில் நிதிபதி கர்ணன் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், நீதிபதி கர்ணனின் 6 மாத தண்டனைக் காலம் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து அவர் நாளை விடுதலை செய்யப்படுகிறார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன