வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

குஜராத் தேர்தல் முடிவு… தம்பட்டம் அடித்த பா.ஜனதாவிற்கு மக்கள் அடித்த எச்சரிக்கை மணி – சிவசேனா விமர்சனம்

குஜராத்தில் பா.ஜனதா 99 தொகுதிகளை வென்று தொடர்ந்து 6-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. பா.ஜனதாவுக்கு கடும் சவால் அளித்த காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) ஒரு தொகுதியில் வென்றது.
 பாரதீய பழங்குடியினர் கட்சிக்கு 2 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றனர். பாரதீய ஜனதா 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என நிர்ணயம் செய்து பணியாற்றியது, ஆனால் 100 தொகுதிகளை கூட எட்டமுடியவில்லை.  இவ்விவகாரம் தொடர்பாக பிற எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. மம்தா பானர்ஜி “இப்போதைய நேரத்தில் ஒரு சமமான தீர்ப்பை வழங்கிய குஜராத் மாநில மக்களுக்கு வாழ்த்துக்கள். இது தற்காலிகமான மற்றும் அவமானப்படாத வெற்றியாகும், இருப்பினும் பாரதீய ஜனதாவிற்கு இது தார்மீக ரீதியிலான தோல்விதான். பொதுமக்களுக்கு நேரிட்ட அட்டூழியங்கள், அதீத கவலை மற்றும் அநீதிக்கு எதிராக குஜராத் மக்கள் வாக்களித்து உள்ளனர்.
மேலும் 2019 பாராளுமன்ற தேர்தலை குறிப்பிட்டு குஜராத் மாநில மக்கள் பூனைக்கு மணிகட்டி உள்ளனர்,” என குறிப்பிட்டு உள்ளார்.
இந்நிலையில் பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான சிவசேனா, குஜராத் தேர்தல் முடிவு எதேச்சதிகாரத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு எச்சரிக்கை மணி என்று விமர்சனம் செய்து உள்ளது. சிவசேனாவின் ‘சாம்னா’ பத்திரிகையில் பா.ஜனதாவின் வெற்றி விமர்சனம் செய்யப்பட்டு உள்ளது. குஜராத்தில் 150–க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பா.ஜனதா தம்பட்டம் அடித்தது. ஆயினும், 100 இடங்களில் வெற்றி பெறுவது கூட கடினமான இலக்கு என்பது நிரூபணம் ஆகிவிட்டது. பா.ஜனதா தலைவர்களுடன் ஒப்பிடுகையில் ராகுல்காந்தியும், ஹர்திக் பட்டேலும் குரங்குகள் என்றும் ஏளனம் செய்தார்கள். இன்றைக்கு இந்த குரங்குகள், சிங்கத்தை அறைந்துவிட்டன.
450 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன