
பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷின் மரணம் குறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனமாக இருந்த பிரதமர் மோடியை பிரகாஷ் ராஜ் என்னை விட மோடி ஒரு சிறந்த நடிகர்” என விமர்சித்தார்.
அது முதல் தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்.

இந்த நிலையில் பாரதீய ஜனதா குஜராத், மற்றும் இமாசலபிரதேசம் ஆகிய 2 மாநிலங்களில் வெற்றி பெற்று உள்ளது. இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் அன்புள்ள பிரதம மந்திரி, வெற்றிக்கு வாழ்த்துக்கள் … ஆனால் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

முன்னதாக பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷின் மரணம் குறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனமாக இருந்த பிரதமரை பிரகாஷ் ராஜ் என்னை விட மோடி ஒரு சிறந்த நடிகர் என விமர்சித்திருந்தார். பிரதமரின் நடவடிக்கைக்கு எதிராகவும், தமிழக அரசியலின் தற்போதையை நிலையைக் கண்டித்தும் நடிகர் பிரகாஷ் ராஜ் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் பிரகாஷ் ராஜூக்கு எதிராக வழக்குகளை தொடர்ந்தனர்.
இந்நிலையில் அன்புள்ள பிரதமரே, வெற்றிக்கு வாழ்த்துகள்… ஆனால் நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? என்று பதிவிட்டுள்ளார். நீங்கள் உங்கள் வளர்ச்சி அரசியலால் இத்தேர்தலில் அமோக வெற்றியல்லவா பெற்றிருக்க வேண்டும். ஆனால் எதிர்பார்த்ததை விட குறைந்த இடங்களிலேயே வெற்றி பெற்றிருக்கிறீர்கள். 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவது என்னவாயிற்று என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தான், மதம், சாதி இவற்றையெல்லாம் கடந்து ஒரு பிரச்னை இருப்பது தெரிகிறதா?, கிராமப்புற விவசாயிகள், ஏழைகளின் புறக்கணிக்கப்பட்ட சப்தம் நிறைந்த குரல் அது உங்களுக்கு கேட்கிறதா சும்மாத்தான் கேட்கிறேன் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
448 Views
