வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட ரிலீசுக்கு சிக்கல் ஏற்படுத்தும் ஜன்னல் ஓரம் பட கடன்…!

 

அரவிந்த் சாமி-அமலாபால் ஜோடியின் பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட ரிலீஸ் நடிகர் விமல் புகாரால் கேள்விக்குறியதாகி உள்ளது.
பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தயாரிப்பாளர் முருகன் சில ஆண்டுக்கு முன் ஜன்னல் ஓரம் என்ற் படத்தை தயாரித்தார்.
இதில் பார்த்திபன், விதார்த் இவர்களோடு விமல் நடித்தார்.
அந்த பட ஷூட்டிங் நேரத்திலும், ரிலீஸ் ஆகும் போதும் விமல் தனது பெயரை வைத்து  கடன் வாங்கி கொடுத்தாராம்.
ஆண்டுகள் ஓடியும் கடன் அடைக்கப்படவில்லை.  அந்த கடன் வட்டியோடு வளர்ந்து நிற்கிறது.
தயாரிப்பாளர் முருகன் இப்போது பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை தயாரிக்கிறார். இதில் அரவிந்த் சாமி, அமலாபால் ஜோடி நடிக்கின்றனர்.
அதே நேரம் விமல் சொந்த படமாக மன்னர் வகையறா என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.
வாங்கிய கடன் பட ரிலீஸ் நேரத்தில் சிக்கலான சூழலை ஏற்படுத்தும் என உணர்ந்து கடன் வாங்கி திருப்பி தராத தயாரிப்பாளர் முருகனின் பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட ரிலீசுக்கு முன் கடனை திரும்ப வாங்கித் தர வேண்டும் என நடிகர் விமல் புகார் கடிதம ஒன்றை தயாரிப்பாளர் சங்கத்தில் கொடுத்து இருக்கிறார்.
 
548 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன