புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

ஏப்ரல் 16-ஆம் தேதி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா

 

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு,

தேக்கடி ராஜீவ்காந்தி கலையரங்கத்தில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது

தேனி மாவட்டம் குமுளி அருகே உள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழுநிலா விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம் .

தமிழக கேரள மலைப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால் கோவில் திருவிழா நடைபெற முன் ஏற்பாடு ஆலோசனை கூட்டம் கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்,

இரு மாநில வனத்துறை அதிகாரிகள் உட்பட பல அதிகாரிகள் கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.

ஏப்ரல் 16-ஆம் தேதி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா நடைபெறுவதை ஒட்டி, தேக்கடி ராஜீவ்காந்தி கலையரங்கத்தில் இரு மாநில அதிகாரிகளிடையே ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது

தேனி மாவட்ட ஆட்சி தலைவர் முரளிதரன், இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷிபா ஜார்ஜ், தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் , தேனி மற்றும் இடுக்கி மாவட்ட வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்து கொண்டு, திருவிழாவிற்கு தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை குறித்தும், பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள், உணவு மற்றும் குடிநீர் வசதிகள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

 

302 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன