ஏப்ரல் 16-ஆம் தேதி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு,
தேக்கடி ராஜீவ்காந்தி கலையரங்கத்தில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது
தேனி மாவட்டம் குமுளி அருகே உள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழுநிலா விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம் .
தமிழக கேரள மலைப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால் கோவில் திருவிழா நடைபெற முன் ஏற்பாடு ஆலோசனை கூட்டம் கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்,
இரு மாநில வனத்துறை அதிகாரிகள் உட்பட பல அதிகாரிகள் கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.
ஏப்ரல் 16-ஆம் தேதி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா நடைபெறுவதை ஒட்டி, தேக்கடி ராஜீவ்காந்தி கலையர...

