திங்கட்கிழமை, ஆகஸ்ட் 3
Shadow

வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு சட்டம் ரத்து செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி அரசாணை வெளியிட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உள்ஒதுக்கீடு அரசியல் அமைப்பிற்கு எதிரானது என கூறி தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, பா.ம.க. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.எல்.கவாய் அமர்வு தீர்ப்பு வழங்கியது.
அப்போது, உள் ஒதுக்கீடு செல்லாது என்ற என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பு அளித்தனர்.
318 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன