வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

இளையராஜா பாவம்… சொல்கிறார் திருமாவளவன் MP

 

 

 

 

ஆர்எஸ்எஸ் காரர்கள் இளையராஜாவை சுற்றிவளைத்து இருக்கக்கூடும் என நினைக்கிறேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பேசியதாவது, அரசியல் ஆதாயங்களுக்காக இதுவரை எந்த முடிவையும் எடுத்ததில்லை.

விளிம்பு நிலை மக்களுக்கு பாடுபட வேண்டும் என்ற பொறுப்பு உணர்வுடன் மட்டுமே முடிவுகளை எடுத்து வருகிறேன். இதை தொடர வேண்டிய வரலாற்று கட்டாயம் இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் பேச எழும்போதெல்லாம் பதட்டமாக தான் இருப்போம். முக்கிய கட்சிகள் பேசி முடித்தபின் தான் நான் பேச வேண்டிய நிலை வரும். மற்ற உறுப்பினர்கள் பேசுவதை உள்வாங்கிக் கொண்டு அவர்கள் பேசாததை பேசுவேன்

கர்நாடகாவில் ஹிஜாப்க்கு எதிராக சங் பரிவார் கும்பல் தூண்டிவிட்டு மாணவ சமூகத்தை பிளவு படுத்தும் செயலில் ஈடுபடுகிறது.

இஸ்லாமியர்களுக்கு எதிராக குரல் எழும் போதும், அதை எதிர்த்து நிற்கும் கடமை இஸ்லாமியர்கள் அல்லாத சமூகத்திற்கும் இருக்கிறது.

இஸ்லாமிய சமூகம் வீதிக்கு வர வேண்டும், கோபப்பட வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்.

அதற்கு எதிராக பேச வேண்டியவர்கள், வீதிக்கு வர வேண்டியவர்கள், வீறு கொண்டு எதிர்வினை ஆற்ற வேண்டியவர்கள் பாசிசத்திற்கு எதிரான ஜனநாயக சக்திகள் தான். இவர்களை அம்பலப்படுத்த வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை.

மோடியை எப்படி அவர் விமர்சித்து இருப்பார் என சொல்ல முடியாது. அவரால் மோடியை சகித்திருக்க முடியாது.

அவர் இருந்திருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. அவர் இன்னும் 5 ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால், இந்தியாவின் தலையெழுத்தே மாறியிருக்கும்; திசை வழியே மாறியிருக்கும். அவர் மறைந்த பிறகு இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

சனாதன கும்பலின் முதல் எதிரி அம்பேத்கர். ஆர்.எஸ்.எஸ் யின் அரசியலை இறுதி மூச்சுவரை மூர்க்கமாக எதிர்த்தார் அம்பேத்கர்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் 13 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இசைஞானி இளையராஜா போன்றவர்களை குறி வைப்பதே அவர்களின் முக்கிய நோக்கம். இளையராஜா பாவம் என்று இரக்கம் காட்ட விரும்புகிறேன்.

தமிழ்நாட்டை குறிவைத்து விட்டார்கள். இஸ்லாமிய வெறுப்பை தீவிரப்படுத்துகிறார்கள். கிருத்துவ எதிர்ப்பையும் கையில் எடுக்கிறார்கள்.விடுதலை சிறுத்தைகளை சீண்டினால் கவனம் கிடைக்கும் என நினைக்கிறார்கள். பாஜகவா? விடுதலை சிறுத்தைகளா? என்ற அரசியலை எடுக்க எந்த தயக்கமும் எங்களுக்கு இல்லை. இது சமூக நீதி மண், இங்கு காலூன்ற அனுமதிக்கக் கூடாது என்ற கவலை தான் இருக்கிறது.

கலைஞர் இல்லை, ஜெயலலிதா இல்லை என்று அவர்கள் தப்புக்கணக்குப் போட்டார்கள். ஜெயலலிதா கலைஞர் என இருவருக்குமான வலிமையுடன் பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் வலிமை மு.க.ஸ்டாலினுக்கு இருப்பதை காட்டிக் கொண்டிருக்கிறார்.

அதே போல் உங்கள் வாழ் ஒட்ட நறுக்கப்படும் என எச்சரிக்கை கொடுக்கும் வகையில் சட்டமன்றத்தில் அவர் பேசியிருக்கிறார். இதனால் தான் சமூக நீதி அரசு என்று கூறுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

303 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன