வெள்ளிக்கிழமை, அக்டோபர் 9
Shadow

கிறிஸ்துமஸ் விருந்தாக வரப்போகும் விமலின் மன்னர் வகையறா டீசர்..!

விமல் நடிப்பில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு வெளியாகவிருக்கும் படம் ‘மன்னர் வகையறா’. பூபதி பாண்டியன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை விமல் தனது சொந்த நிறுவனமான ஏ3வி சினிமாஸ் மூலம் தயாரித்திருக்கிறார்.

விமல் ஜோடியாக கயல் ஆனந்தியும், முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக், சாந்தினி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்திருக்கின்றனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதபாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பாடல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் 2018 ஜனவரியில் ரிலீசாக இருக்கிறது.
இதற்கிடையில் ஜன்னல் ஓரம் படத்திற்காக அந்த படத்தயாரிப்பாளருக்கு வாங்கிக் கொடுத்த கடனை திரும்ப பெற்றுத்தரும்படி தயாரிப்பாளர் சங்கத்தில் விமல் புகார் கடிதம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன