ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

பூனைக்குட்டி என நினைத்த தொழிலாளர்கள் கையில் தூக்கி எடுத்து வந்த சிறுத்தை குட்டி!

நீலகிரி டிஸ்ட்ரிக் கூடலூர் அருகே உள்ள புலம்பட்டி பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் இன்னிக்கு மார்னிங் ஒர்க்கர்ஸ் வழக்கம்போல தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாய்ங்க. அப்போது தேயிலை செடிகளுக்கு இடையே பிறந்து சில நாட்களே ஆன சிறுத்தை குட்டி ஒன்று கிடந்துள்ளது. ஆன அதனை பூனைக் குட்டி என நினைத்த தொழிலாளர்கள் கையில் தூக்கி எடுத்து வந்துட்டாய்ங்க.

பின்னர் அருகில் இருந்தவர்கள் அது பூனைக் குட்டி இல்லை சிறுத்தை குட்டி என கூறியதை அடுத்து, வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் பிறந்து சில நாட்களே ஆன சிறுத்தை குட்டியை மீட்டு ஏற்கெனவே அது கிடந்த அதே பகுதியில் விட்டுள்ளனர்.

இது குறிச்சு ஃபாரஸ்ட் டிப்பார்ட்மெண்ட் டீம் சொன்னது : தாய் சிறுத்தை இரை தேடுவதற்காக குட்டியை பாதுகாப்பான இடத்தில் விட்டு சென்றிருக்க வாய்ப்பு இருக்கிறது. தற்சமயம் குட்டியை அதே பகுதியில் விட்டுவிட்டு நான்கு வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். நிச்சயம் தாய் சிறுத்தை குட்டியை எடுத்து செல்லும் என நம்புகிறோம். அதுவரை வனத்துறையினர் இந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்

 

382 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன