வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது – சுப்ரீம் கோர்ட்

தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது – சுப்ரீம் கோர்ட்
தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் கொரோனாவை தடுப்பதற்காக தடுப்பூசிகளை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தடுப்பூசி கட்டாயம் என்று பல மாநில அரசுகள் அறிவித்து இருப்பதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்ந்நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை பொது இடங்களில் அனுமதிக்க மறுக்கும் உத்தரவை மாநில அரசுகள் நீக்க வேண்டும்.
பொதுமக்கள் நலனுக்காக சில கொள்கைகளை உருவாக்கி மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் விதிக்கலாம்.
மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை அறிவுக்கு ஒவ்வாதது என கூறமுடியாது என தெரிவித்த சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை முடித்து வைத்தது.
207 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன