புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

தனுஷின் அடுத்த பட நாயகி!

தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படத்தை தொடர்ந்து, இயக்குனர் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார்.

தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் ‘வாத்தி’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

இவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இதற்கிடையில் அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை ‘சத்யா ஜோதி ஃபிலிம்ஸ்’ சார்பாக தியாகராஜன் தயாரிக்கிறார். டார்க் காமெடி ஜானரில் உருவாகவுள்ள இப்படத்திற்கு ‘கேப்டன் மில்லர்’ என பெயரிடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் படங்களில் நடித்த பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக பிரியங்கா மோகனிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

325 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன