திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

இயக்குனர் கே.பாக்யராஜ் கிளாப் போர்ட் அடித்து துவக்கி வைத்த “சூரகன்”

 

சதீஷ் G.குமார் இயக்கும் “சூரகன்”

3rd Eye Cine Creations சார்பாக V.கார்த்திகேயன் பிரம்மாண்டமாக தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் “சூரகன்” அஹம் பிரம்மாஸ்மி படத்தை இயக்கிய சதீஷ் G.குமார் இப்படத்தை இயக்குகிறார். மேலும் ஒளிப்பதிவு இயக்கத்தையும் மேற்கொள்கிறார்.

க்ரைம் திரில்லராக உருவாகும் “சூரகன்” படத்தில் கதையின் நாயகனாக V.கார்த்திகேயன் நடிக்க கதாநாயகியாக சுபிக்‌ஷா நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் பாண்டியராஜன், வின்சண்ட் அசோகன், நிழல்கள் ரவி நடிக்க, உடன் ரேஷ்மா பசுபுலெடி, வினோதினி, சுரேஷ் மேனன், K.S.G. வெங்கடேஷ், சாய் தீனா, ஜீவா ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இன்று இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது. இப்படத்தின் படபிடிப்பை இயக்குனர் கே.பாக்யராஜ் கிளாப் போர்ட் அடித்து துவக்கி வைத்தார்.

 

240 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன