ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 11
Shadow

நக்கல், நையாண்டிகளை தவிர்த்தால் சந்தானம் சக்கப் போடு போடலாம் – விமர்சனம்


நக்கல், நையாண்டிகளை தவிர்த்தால் சந்தானம் சக்கப் போடு போடலாம் – விமர்சனம்

ஆக்‌ஷன் ஹீரோ ஆக தன்னை முன்னிறுத்தி கொள்ள முயற்சிக்கிறார் சந்தானம். விமர்சனத்தை பார்ப்பதற்கு முன் ஹீரோ ஆக நிலை நிறுத்தி கொள்ள சந்தானம் ரொம்பவே மெனக்கொட்டிருக்கிறார். உடல் அமைப்பிலும், நடனத்திலும், ஆக்‌ஷனிலும் நடிப்பிலும்… ஆனால் அவரின் வழக்கமான காமெடி நையாண்டி முத்திரை பல இடங்களில் வெளிப்படுவதை தவிர்க்க முடியவில்லை.

இனி கதை…
சென்னையில் மிகவும் வசதியானவரான வி.டி.வி கணேஷின் மகன் சந்தானம். இவருடைய நண்பர் சேது, தாதாவாக இருக்கும் சம்பத்தின் தங்கையை காதலிக்கிறார். இவர்கள் காதலுக்கு பல எதிர்ப்புகளை மீறி உதவி செய்கிறார் சந்தானம். இதனால், கோபமடையும் சம்பத், சந்தானத்தை கொல்ல முயற்சி செய்கிறார்
சந்தானமோ சென்னையில் இருந்தால் பிரச்சனைகள் வரும் என்று பெங்களூரு சென்று விடுகிறார். அங்கு வைபவியை பார்த்தவுடன் காதல் வலையில் விழுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வருகிறார்கள். வைபவியின் அண்ணன் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சந்தானத்தை கொலை செய்ய திட்டம் போடுகிறார். இதற்கிடையில் வைபவியை கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சி செய்கிறது.
இறுதியில் சந்தானம் எப்படி இந்த பிரச்சனைகளை சமாளித்தார்? நாயகி வைபவியை திருமணம் செய்தாரா? தாதாவான சம்பத், சந்தானத்தை கொலை செய்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.


படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தானம், தோற்றம், ஸ்டைல், நடனம், சண்டை என அனைத்திலும் கலக்கி இருக்கிறார். ரோபோ சங்கரை கலாய்ப்பது, விவேக்குடன் பேசும் காட்சிகள், சம்பத்துடனான காட்சிகள் எல்லாம் ரசிக்கும் படி நடித்திருக்கிறார். ”பஞ்ச் டயலாக் பேசிட்டு அடிக்கிறது எல்லாம் பழைய ஸ்டைலு, பஞ்ச் டயலாக் பேசுறவனை அடிக்குறதுதான் புது ஸ்டைலு”, ”போனவாரம் கூட ஓட ஓட ஒருத்தனை வெட்டுனேன், ஓடும்போது முடி வெட்றது ரொம்ப கஷ்டமாச்சே, எப்படி வெட்டுன” போன்ற வசனங்கள் அவருக்கே உரிய ஸ்டைலில் அசத்தி இருக்கிறார் சந்தானம்.
நாயகி வைபவி படம் முழுக்க வந்தாலும் அவருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. விவேக்கின் காமெடியும், ரோபோ சங்கரின் காமெடியும் படத்திற்கு பலம்.
வி.டி.வி கணேஷ், சஞ்சனா சிங், மயில்சாமி, சேது, பவர்ஸ்டார் ஆகியோர் சரியான கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
தங்கைக்காக எதையும் செய்யத் துடிப்பவராக நடித்திருக்கிறார் சம்பத். சரத் லோகிதஸ்வாவும், நாராயண் லக்கியும் தங்களின் வழக்கமான வேலையை செய்துவிட்டுப் போகிறார்கள். சந்தானம் உட்பட அனைவருமே ரொம்ப பேசுகிறார்கள் அது பெரும் பலவீனமாக இருக்கிறது.


குடும்பத்தினரின் சம்மதத்தோடு காதலியைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற கருத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர் சேதுராமன். கொஞ்சம் பழைய கதை என்றாலும், அதில் கொஞ்சம் வித்தியாசம் காண்பிக்க முயற்சி செய்திருக்கிறார்.
லாஜிக் மீறல்கள், நம்ப முடியாத காட்சிகள், முந்தைய தமிழ்ப் படங்களின் சாயல்கள் என அனைத்தும் ரொம்ம்பவே டயார்ட் ஆக்குகிறது.
சிம்புவின் இசை படத்தை தூக்கி நிறுத்த முயற்சித்து தோல்வி அடைந்து இருக்கிறது. பாடல்களை பொறுத்த வரை காதல் தேவதை, கலக்கு மச்சான் பாடல்களின் வரிகளும், இசையும் ஓகே… அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு பல இடங்களில் பலம்… சில இடங்களில் பலவீனம்.
வழக்கமான லொள்ளு நையாண்டி நக்கல் பஞ்ச் வசனங்களை தவிர்த்தால் ஹீரோவாக சந்தானம் கண்டிப்பாக ‘சக்க போடு போட வாய்ப்பு உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன