திங்கட்கிழமை, செப்டம்பர் 21
Shadow

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு இன்று வாய்ப்பு!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு இன்று வாய்ப்பு!

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன