புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

தவறான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் – மீனா உருக்கம்!

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் ஜூன் 28-ந் தேதி இரவு காலமானார். 48 வயதாகும் இவருக்கு சில தினங்களுக்கு முன் திடீரென நுரையீரலில் தொற்று அதிகமானதால், நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு உறுப்புகள் கிடைக்காத நிலையில், ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்து சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் உயிரிழந்தார்.

அவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மேலும் திரைப்பிரபலங்கள் பலர் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். வித்யாசாகரின் உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது இறுதி சடங்கு முடிந்ததும் உடல் தகனம் செய்யப்பட்டது.

 

இந்நிலையில், நடிகை மீனா தற்போது இணையத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் என் கணவரின் இறப்பினால் ஆழ்ந்த சோகத்தில் உள்ளேன்.

ஊடகத்தினர் இந்த சூழ்நிலையில் எங்கள் தனியுரிமையை மதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இந்த விஷயத்தில் மேலும் தவறான செய்திகளை பரப்புவதை தயவு செய்து நிறுத்துங்கள்.

இந்த கடினமான சூழலில் என்னுடன் இருந்த நல் உள்ளங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.

259 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன