சனிக்கிழமை, நவம்பர் 1
Shadow

இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சிகள் இப்போது வீழ்ச்சி அடைந்துள்ளன- பிரதமர் மோடி!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை குறித்து பாஜக தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத், பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:

சர்தார் படேல் ஒருங்கிணைந்த இந்தியாவின் அடித்தளத்தை அமைத்ததாகவும், இப்போது அதை மேலும் முன்னெடுத்துச் செல்வது பாஜகவின் பொறுப்பு என்றும், பிரதமர் மோடி தெரிவித்தார்.

வம்ச அரசியல்,வாரிசு அரசியல் கட்சிகளால் நாட்டு மக்கள் சலிப்படைந்துள்ளனர் என்றும், இதுபோன்ற கட்சிகள் நீண்ட காலம் நீடிப்பது கடினம் என்றும் பிரதமர் கூறினார்.

இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சிகள் இப்போது இறுதி வீழ்ச்சியில் உள்ளன; அவர்களை கேலி செய்யாமல் அவர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

233 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன