புதன்கிழமை, மே 20
Shadow

சினிமா வெறி கொண்ட ரசிகனை அடக்கும் கும்கி யானையா? அடி வாங்கி குப்புற விழுந்த யானையா? கோடங்கி விமர்சனம்

 

சினிமா வெறி கொண்ட ரசிகனை அடக்கும் கும்கி யானையா? அடி வாங்கி குப்புற விழுந்த யானையா?

கோடங்கி விமர்சனம்

 

கிராமத்து மண் மணம், அதிரடி ஆக்‌ஷன், பறந்து

பறந்து அடிக்கிற ஹீரோ, நெஞ்சைபிழிய வைக்கிற செண்டிமெண்ட், பஞ்ச்சமில்லாம மாஸான பஞ்ச் டயலாக் இதெல்லாம் ஒரு படத்துல இருந்தா அது கண்டிப்பா ஹரி இயக்கிய படமாதான் இருக்கும்.

கூடவே ஸ்மார்ட்டான அருண்விஜய் சேர்ந்தா மாஸ் எண்டடெய்னார்தானே… அதுதான் யானை. படத்து பேர் மாதிரியே படமும் திரைக்கதையும் நல்லா பலமா இருக்கு.

 

வழக்கம் போல ஹரி பார்முலாபடி ஊர்ல பெரிய தலைக்கட்டு PRV குடும்பம். இதுல சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், சஞ்சீவி மூத்த தாரத்து பசங்க. ஜாதில ஊறிப்போனவங்க. அருண் விஜய் மட்டும் இரண்டாம் தாரமான ராதிகாவோட மகன். இவருக்கு ஜாதிய விட மக்கள் மேல பாசம் அதிகம். ஆனாலும் அண்ணன்கள் மேல அம்புட்டு பாசம்.

 

பெரிய தலைகட்டுன்னா பக்கத்து ஊர்ல ஒரு வில்லன் இருந்தாகனுமே… ஜெயபாலன் தான் வில்லன். ஒரு சண்டையில ஜெயிலுக்குப் போற ஜெயபாலன் பையன் விடுதலையாகி ஊருக்கு வறார்.

வந்து சமுத்திரகனி குடும்பத்தை பழி வாங்குனாரா? இல்லியான்னு ஒரு கதை…

கிளைக்கதையா சமுத்திரக்கனி பொண்ணு அம்மு அபிராமி வேற மதத்து பையனோட காதல்ல விழுந்து வீட்டை விட்டு ஓடிப்போறா அதனால அண்ண்ன்களுக்கும் அருண்விஜய்க்கும் பிரச்சனையாகி அருண்விஜய்யை வீட்டைவிட்டு அனுப்பிடுறாங்க. அருண்விஜய் மறுபடியும் அண்ணன்களோட சேர்ந்தாரா இல்லியான்னு ஒரு கிளைக்கதை…

 

இதுக்கு இடையிலயே பிரியாபவானிசங்கரோட காதல்… தங்கை அம்மு அபிராமியோட காதல்னு வேற தனி டிராக் ஓடுது…

இதையெல்லாம் கலந்து கட்டி அடிச்சி துவைச்சி உதறிப்பாத்தா அதுதான் யானை படம்!

இது முழுக்க முழுக்க ஹரியோட அதிரடி அக்‌ஷன் மசாலா படம்தான். என்னதான் ஹரி படமா இருந்தாலும் அருண்விஜய் முதல் முறையா சேர்ந்தாதால ஆக்‌ஷன் சீன்கள் வழக்கத்தை விட அனல் கக்குக்து.

அதோட செருப்பைக் கழற்றிட்டு பயிர்களின் மேல் ஓடுவது, முப்பது பேரை ஒரே இடத்தில் தூக்கியடிப்பது என மாஸாக வைக்கப்பட்ட சீன்களில் அருண் விஜய் மிகப் பொறுத்தமாக இருக்கிறார்.

 

ராதிகா தான் ஒரு தேர்ந்த நடிகை என்பதை சில காட்சிகளில் நிரூபித்து தனக்கான ஸ்கோரை அள்ளிச்ச்செல்கிறார்.

 

சமத்துவம் பேசித்திரிந்த சமுத்திரக்கனியை சாதிவெறி ஊறிப்போன நபராக காட்டுவதும், அதற்கு தம்பிகளான சஞ்சீவ்வும், போஸ் வெங்கட்டும் ஆமாம் போட வைத்திருப்பதும் ரொம்ப புதுசு.

 

வழக்கமா ஹீரோயின்களுக்கு ஹரி படத்துல கிளாமர் தூக்கலா இருக்கும்… ஆனா ஆணாதீக்க அட்ராசிட்டிய தோலுரிக்கிற மாதிரி பிரியா பவானி சங்கருக்கு ஒரு காட்சி வைச்சி அப்ளாஸ் வாங்கிக்கொள்கிறார் இயக்குனர்.

 

எல்லாம் சரியா இருந்தாலும் ஹரி படத்துக்கே உரிய காமெடி டிராக் மட்டும் இந்த படத்துல எடுபடவே இல்ல… யோகிபாபு இன்னும் பலர் இருந்தாலும் என்னமோ ஒன்னு இல்லாம இருந்தது காமெடியில…

யானை பலமா இருக்க வேண்டிய பின்னணி இசையும் சரி, பாடல்களும் சரி ஜி.வி. பிரகாஷ் இன்னும் மிரட்டி இருக்கலாம்.

 

ஆனா ஒண்ணு சமீபத்திய தமிழ் சினிமா சீரியல்களில் வீண் வம்புக்காக டிரண்டிங் வரணும்னு வைக்கப்படும் சாதிய, மத ரீதியிலான மசாலா வசனங்களுடன் வரும் கமர்சியல் மசாலா படங்களுக்கு மத்தியில  , சாதிக்கு எதிரா, சாதி பார்ப்பவர்களுக்கு சவுக்கடி குடுக்குற மாதிரி சாதி வெறி தப்புன்னு இயக்குனர் ஹரி தெளிவுபடுத்தி இருப்பதற்காக ஒரு சபாஷ் போடாலாம்.

 

நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்தாலும் ஹரி படம்னா இப்படித்தான் இருக்கும் அப்படீன்னு நம்பி போகும் ரசிகனை ஏமாற்றாத யானை… இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் கோயில் யானையாக அலங்காரம் பெற்று கொண்டாடப்பட்டிருக்கும்!

 

  • கோடங்கி

     மதிப்பீடு – 3/5

 

349 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன