புதன்கிழமை, ஜூன் 17
Shadow

விடிய விடிய நடைபெற்ற நெய்தல் கலைவிழாவில் பங்கேற்ற கனிமொழி எம்.பி – தூத்துக்கு!

தூத்துக்குடியில் தமிழர்களின் கலை,மண் சார்ந்த வாழ்வியல் முறை, பாரம்பரிய உணவு வகைகளை நினைவு கூறும் விதமாக கனிமொழி எம்.பி. முன்னெடுப்பில் நெய்தல் கலை விழா கடந்த 7-ந் தேதி மாலை வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் தொடங்கியது.

நேற்று மாலை சக்கை குச்சி ஆட்டம், கிராமிய கலை நிகழ்ச்சி, கலை மாமணி முத்துலட்சுமி வில்லுப்பாட்டு, துடுப்பாட்டம், சிலம்பாட்டம்,பறையாட்டம், கலை நிகழ்ச்சிகள், திரைப்பட புகழ் செந்தில்-ராஜலட்சுமி குழுவினரின் இசை நிகழ்ச்சிகள், புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிராயன் கூத்து நிகழ்ச்சிகள் என இரவு 2 மணி வரை நடைபெற்றது.

இன்று அதிகாலை விடிய விடிய நடைபெற்றதால் அதனை காண பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட புகழ் ராஜலட்சுமி-செந்தில் தமிழக அரசு பெண்களுக்கு பேருந்தில் இலவச பயண சலுகை வழங்குவது போல் கலைஞர்களுக்கும் பேருந்து பயண சலுகை வழங்க வேண்டும் என்று கனிமொழியிடம் கோரிக்கை விடுத்தனர்.

கலை விழாவில் கனிமொழி எம்.பி.யுடன் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., சண்முகையா எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்,மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான்,ஸ்பிக் நிறுவன முழு நேர இயக்குனர் ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இன்று 4-வது நாள் நெய்தல் கலை விழா நிகழ்ச்சிகளுடன் நிறைவுபெறுகிறது.

இறுதி நாளான இன்று தூத்துக்குடி ராஜேந்திரன் குழுவினரின் சிலம்பாட்டம், சக்கரத்தாழ்வார் குயில் ஆட்டம், முத்துப் பெருமாள் குழுவினரின் கணியான் கூத்து, காயல்பட்டினம் தூக்கி குழுவினரின் இசை நிகழ்ச்சி, முருகசாமி குழுவினரின் பம்பை-கைசிலம்பம், மற்றும் கழியல் நிகழ்ச்சி, பறையாட்டம், இசை நிகழ்ச்சிகள் உட்பட மண்சார்ந்த கலைஞர்களின் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் கிராமிய மணம் கமழ நடைபெறுகிறது.

300 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன