
தேஜாவு ட்ரைலரை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்!!!
அருள்நிதி நடிப்பில் உருவாகி இருக்கும் தேஜாவு படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலரை வெளியிட்டார் உதயநிதி ஸ்டாலின். அதன் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அறிமுக அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘தேஜாவு’. மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி வெங்கட், ராகவ் விஜய், சேத்தன், ‘மைம்’ கோபி, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம், வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணை தயாரிப்பில் உருவாகியிருக்கிறது.
இந்த படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலரை இன்று நடிகரும், தயாரிப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். இந்த படத்தின் நாயகன் அருள்நிதி, தயாரிப்பாளர் விஜய் பாண்டி, இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோகஸ்தர் C.ராஜா ஆகியோர் உடனிருந்த இந்த நிகழ்வு, நல்ல படியாக முடிந்தது. இதனைத் தொடர்ந்து, படத்தின் ட்ரெயிலரைப் பார்த்த உதயநிதி, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
