
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த செவாய்க்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலின் தனிமைப்படுத்திக் கொண்டார் இந்த நிலையில் 2 நாட்கள் தனிமைபடுத்தி கொண்டிருந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா தொடர்பான அறிகுறிகள் குறித்து மு.க ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது என காவேரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இன்று அவர் வீடு திரும்புவார் என திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் மு.க.ஸ்டாலினின் உடல் நலம் குறித்து தொலைபேசியில் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். இதுகுறித்து பிரதமருக்கு நன்றிய கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் நன்கு குணமடைந்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் சென்னையில் வரும் ஜூலை 28ஆம் தேதி துவங்க உள்ள உலக செஸ் விளையாட்டுப் போட்டிக்கு அழைப்பு விடுக்க நேரில் வருவதாக இருந்ததை குறிப்பிட்டு, தான் தற்போது மருத்துவ கிசிச்சை பெற்றுவருவதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரை அனுப்பி வைப்பதாகவும், துவக்க விழா நிகழ்ச்சியில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்
