திங்கட்கிழமை, மே 13
Shadow

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி !

 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. இன்று 52 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது.

வரத்து அதிகரிப்பு காரணமாக தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்பனை ஆனது. தக்காளி விலை குறைந்து இருந்தாலும் வரத்து அதிகரிப்பு காரணமாக விற்பனை ஆகாமல் தேங்கி இருக்கிறது. வியாபாரிகள் அதனை குப்பையில் வீசி வருகின்றனர்.

இதுகுறித்து தக்காளி மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறும்போது:- கோயம்பேடு மார்கெட்டுக்கு நேற்று 56 லாரிகளில் தக்காளி குவிந்ததால் விலை சற்று குறைந்தது.

இதையடுத்து முதல் ரக தக்காளி பெட்டி ஒன்று (14 கிலோ) ரூ.120-க்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மீண்டும் ரூ.30 அதிகரித்து ஒரு பெட்டி தக்காளி ரூ.150-க்கு விற்கப்படுகிறது.

மழை பொழிவு பரவலாக அதிகரித்து உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டால் வரும் நாட்களில் தக்காளி விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

76 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன