திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

அக்னிபாத் திட்டத்தால் நாட்டுக்கும் இளைஞர்களுக்கும் ஆபத்து – ராகுல் காந்தி!

அக்னிபாத் திட்டம் குறித்த பிரதமரின் புதிய ஆராய்ச்சியால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது என காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஓய்வு பெறுகிறார்கள்.

அதில் வெறும் 3,000 பேருக்குத்தான் அரசு வேலை கிடைக்கிறது. 4 வருடங்களுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் ஆயிரக்கணக்கான அக்னி வீரர்களின் எதிர்காலம் என்ன?

பிரதமரின் இந்த புதிய ஆராய்ச்சியால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளன என தெரிவித்துள்ளார்.

283 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன