வியாழக்கிழமை, ஆகஸ்ட் 5
Shadow

தினகரன் ஒரு மாயமான் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காட்டம்

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து, அ.தி.மு.க.வின் உயர் மட்டக்குழுவின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் கூடியது. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:

ஆர்.கே நகர் தேர்தலில் நடந்த தில்லுமுல்லு குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தோம். எங்கள் பக்கம் இருப்பவர்கள் யாரும் தினகரன் தரப்புக்கு செல்லவில்லை எங்களிடம் இருப்பவர்கள் புடம் போட்ட தங்கங்கள். எங்களுக்குள் எந்த பூசலும் இல்லை. தினகரன் அரசியலுக்கு வருவதற்கு 18 வருடங்கள் முன்பே அரசியலுக்கு வந்தவன் நான். அரசியலில் தினகரனை விட மூத்தவன் நான்.

தினகரன் ஒரு மாயமான், மற்றவர்களை விட தினகரனை பற்றி எனக்கு நன்றாக தெரியும். கட்சியில் ஏற்ற, இறக்கங்கள் வருவது சகஜம், பின்னடைவுகளை சரிசெய்து அ.தி.மு.க வலுவாக செயல்படும். கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

221 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

3 × two =