திங்கட்கிழமை, செப்டம்பர் 14
Shadow

மாவீரன் படத்தில் இணையும் நடிகர் யோகி பாபு!

“டாக்டர்”, “டான்” படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வரும் ‘பிரின்ஸ்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரியா போஷாப்கா கதாநாயகியாகவும், சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தை தொடர்ந்து ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். மாவீரன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது.

“மாவீரன்” திரைப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா மற்றும் இயக்குனர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். இதற்கான அறிவிப்பை படக்குழு முன்னதாகவே வெளியிட்டது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிகர் யோகி பாபு இணைந்துள்ளார். இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன