
முன்னணி இயக்குனரான பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. இப்படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ளது. ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ‘டான்ஸிங் ரோஸ்’ கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இரண்டாம் போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இதையடுத்து இப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ்தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என இயக்குனர் பா. ரஞ்சித் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
#NatchathiramNagargiradhu in theatres near you from August 31st!@officialneelam @vigsun @Manojjahson @YaazhiFilms_ @thinkmusicindia pic.twitter.com/wZ8dMVljpv
— pa.ranjith (@beemji) August 4, 2022
