வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 28
Shadow

கலைஞர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம்! முதலமைச்சர் மலர்தூவி அஞ்சலி!!

 

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவுநாளையொட்டி, அமைதி ஊர்வலம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அவரது நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, அவரது நினைவைப் போற்றும் வகையில் திமுக சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஆல்கால் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் கருணாநிதியின் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடம் வரை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், அமைதிப்பேரணி நடைபெற்றது

275 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன