திங்கட்கிழமை, செப்டம்பர் 14
Shadow

சிறுத்தை சிவா, சூர்யா கூட்டணியின் படப்படிப்பு தொடங்கியது!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.

இதில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் ஜூன் 1-ஆம் தேதி வெளியான மாதவனின் ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்திலும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘வணங்கான்’. இப்படத்தில் கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்கவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.

இதனிடையே சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்நிலையில் சிறுத்தை சிவா-சூர்யா கூட்டணி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து, “படப்பிடிப்பு தொடங்கியது. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் தேவை” என சூர்யா பதிவிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன